Unmai Sigaram News: மதுரை மத்திய தொகுதியின் வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்பு: இளைஞர்கள் மற்றும் மகளிருக்கு முன்னுரிமை அளிப்பேன் - VMS. முஸ்தபா எம்.எல்.ஏ உறுதி!
![]() |
மதுரை தமிழ்நாடு சேம்பர் ஆப் காமர்ஸ் ஆடிட்டோரியத்தில், கடந்த 06.06.2026 அன்று தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கம் மற்றும் இணைப்புச் சங்கங்கள் இணைந்து நடத்திய நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்வில் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் முக்கியப் பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.
இதில் மதுரை மத்திய சட்டமன்றத் தொகுதியின் சார்பாகக் கலந்துகொண்ட சட்டமன்ற உறுப்பினர் திரு. மதார் பதூருதின் (எ) VMS. முஸ்தபா அவர்கள் பேசுகையில், "மதுரை மத்திய தொகுதியின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்காக நான் முழு கவனத்தையும் செலுத்துவேன். குறிப்பாக, எனது தொகுதியைச் சேர்ந்த பட்டதாரி இளைஞர்கள் மற்றும் மகளிருக்குத் தேவையான வேலைவாய்ப்புகளை உருவாக்கித் தருவதில் தனிப்பட்ட அக்கறை எடுத்துச் செயல்படுவேன்" என்று உறுதி அளித்தார்.
தொகுதியின் பொருளாதார முன்னேற்றத்திற்கும், வேலைவாய்ப்புகளைப் பெருக்குவதற்கும் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுப்பேன் என்று அவர் தெரிவித்தது அங்கிருந்த வணிகர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றது.

கருத்துகள்
கருத்துரையிடுக