Unmai Sigaram News: இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 04.06.2026 அன்று மாவட்ட ஆட்சித்தலைவராக திரு.M.சிவகுரு பிரபாகரன்,இ.ஆ.ப., அவர்கள் பொறுப்பேற்றுக் கொண்டார்.
இராமநாதபுரம் மாவட்டத்தின் புதிய ஆட்சித்தலைவராக திரு.M.சிவகுரு பிரபாகரன், இ.ஆ.ப., அவர்கள் (04.06.2026) அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொறுப்பெற்றுக் கொண்டார்கள்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில்,
நீங்களும் மாவட்ட கலெக்டர் ஆகலாம் என்ற ஒற்றை வரியை நம்பி கும்பகோணம் தீ விட பேரிடரில் செய்தித்தாள் மூலம் மனதிற்கு அறிமுகமான மரு. இராதாகிருஷ்ணன் இ.ஆ.ப., அவர்க செயல்களாலும் கிழக்கே பயணிக்க வேண்டும் என்ற இலக்கை தீர்மானித்து விட்டு மேற்கு நோக்கி பயணம் செல்வது எவ்வாறு இலக்கை அடைய உதவும் என்ற வரிகளால் ஈர்க்கப்பட்டு மேல்நீ பள்ளிப்படிப்பை முடித்து நான்கு ஆண்டுகள் கழித்து பொறியியல் படிப்பை தந்தை பெரியார் அரசு தொ நுட்பக் கல்லூரியில் சேர்ந்தேன் பல்வேறு தடைகளையையும் தாண்டி கல்லூரியில் முதலிடம் பிடித்து தே அடைந்தேன். கல்லூரியில் பயிலும் போதே அடுத்த நகர்விற்கு திட்டமிட்டு கல்லூரியின் அப்போ நான்காமாண்டு மாணவர் திரு.ரூபன் அவர்களின் வழிகாட்டுதலின்படி சென்னைக்கு வாரந்தே பயணித்து GATE தேர்விற்கு பயிற்சி பெற்றேன். நான்காண்டுகள் முடியும் போதே IIT Madras-ல் மேல்ப வாய்ப்பு பெற்று வெற்றிகரமாக முடித்தேன். IIT Madras ல் படிக்கும் போதே Indian Engineering Se தேர்வில் வெற்றி பெற்று தென்கைரயில்வேயில் IRSE சேரும் வாய்ப்பை பெற்றேன்.
இரயில்வே பணியின் போதே இரவு பகல் பாராத இரயில் பயணத்தின் போது IAS தேர்விற்கு ப பெற்று 2018 ஆண்டு தமிழ்நாட்டில் மூன்றாமிடம் இந்திய அளவில் 101 வது இடம் பெற்று வெற்றி வாய்ப்பு கிடைத்தது. பின்பு பயிற்சியை தொடங்கி Tamil Nadu cadre-ஐ பெற்று திருநெல்வேலியில் ஓரா காலம் மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.ஷில்பா பிரபாகர் சதீஸ் IAS அவர்களிடம் பயிற்சி பெற்றேன்.
பயிற்சியின் போது நான்காவது புத்தக திருவிழாவை மகிழ்ச்சியோடு நடத்தியதும் மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் கழுகு நீர் குளத்திற்கு ஒரே வாரத்தில் வரத்துவாய்க்கால் உருவாக்கி வாரத்தில் இறுதியிலே பெய்த மழையால் அக்குளம் நிரம்பியதும் எனக்கு கிடைத்த மன நிறைவான அனுபவங்கள். பின்பு சார் ஆட்சியர் கொடைக்கானலில் மழைவால் மக்கள் கடந்து செல்ல சிறுபாலம் மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் செய்து கொடுத்ததும் அந்த தருணத்தின் மாபெரும் அனுபவம்.
பின்பு சார் ஆட்சியர் பத்பநாபபுரத்தில் பணியாற்றிய போது அரசு திட்டத்தை சிறப்பாக செய்ததற்கான மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களிடம் பாராட்டு சான்றிதழ் மற்றும் பரிசு பெற்றதும் எனக்கு சிறந்த அனுபவம் ஆகும். பின்பு RDC North ஆக சென்னை மாநகராட்சியில் இரண்டு ஆனர்டுகளுக்கு மேலாக பணியாற்றி மழைநீர் வடிகால் திட்டங்கள், திடக்கழிவு மேலாண்மை, நூலகங்கள், சாலைகள், தெருவிளக்குகள், பேரிடர் மீட்பு பணிகளை மேற்கொண்டு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சரிடம் பல்வேறு பாராட்டு சான்றிதழ்களை பெறும் வாய்ப்பு கிடைத்தது.
பின்னர் ஆணையாளர் கோயம்புத்தூர் மாநகராட்சியில் இரண்டரை ஆண்டுகள் பணி செய்யும் வாய்ப்பை பெற்று பல்வேறு அரசு திட்டங்களை நிறைவேற்றும் வாய்ப்புகள் கிடைத்தது. அவற்றில் செம்மொழிப்பூங்கா, மாநகராட்சி பள்ளிகளில் குழந்தைகள் மற்றும் மாணவ மாணவிகளின் கல்வி மேம்பாடு, ஹாக்கி மைதானம் உள்விளையாட்டு அரங்கங்கள், அறிவுசார் மையங்கள் பேருந்து நிலையங்கள், சாலைகள் pillar III குடிநீர் ஆதார பணிகள், 24 மணி நேரம் குடிதனர்ணீர் வழங்கும் திட்டங்கள், திடக்கழிவு மேலாண்மையில் தமிழகத்தில் முதலிடம் இந்திய அளவில் 28 வது இடம் பல்வேறு பாதாள சாக்கடை திட்டங்கள் மக்களிடம் மனுக்களை பெற்று குறைதீர்க்கும் கூட்டங்கள் போன்ற பணிகளை மேற்கொண்டு தமிழ்நாட்டின் சிறந்த மாநகராட்சிக்கான முதலிடத்தை சுதந்திர தினவிழாவில் பெற்றது சிறந்த அனுபவங்கள்.
தற்போது வரலாற்று சிறப்புமிக்க இராமநாதபுரம் மாவட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவராக பணியாற்ற வாய்ப்பளித்த மாண்புமிகு தமிழ்நாட்டின் முதலமைச்சர் அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன். மேற்சொன்ன, அனுபவங்களை இராமநாதபுரம் மாவட்ட வளர்ச்சிக்காக முழுமையாக பயன்படுத்த உறுதியளிக்கிறேன்.
இராமநாதபுரம் மாவட்டம், தமிழர்களின் பண்பாடு, ஆன்மிகம், கடல்சார் பாரம்பரியம் மற்றும் சுதந்திரப் போராட்ட வரலாற்றில் தனித்துவமான இடத்தைப் பெற்றுள்ளது. உலகப் புகழ்பெற்ற இராமேஸ்வரம் திருத்தலம், ஏர்வாடி தர்ஹா மற்றும் வளமான கடல்சார் வளங்கள், மீனவ பெருமக்களின் பங்களிப்பு, குலசேகரப்பட்டினம் முதல் தனுஷ்கோடி வரை பரந்து விரிந்த இயற்கை வளங்கள் ஆகியவை இந்த மாவட்டத்தின் பெருமையாகும்.
இம்மாவட்டத்தின் தனித்துவமான தேவைகளை கருத்தில் கொண்டு, வேளாண்மை மற்றும் அதனைச் சார்ந்த தொழில்கள், மீன்வளத் துறை, குடிநீர் மேலாண்மை, கல்வி, சுகாதாரம், பெண்கள் மற்றும் இளைஞர்களின் முன்னேற்றம், தொழில் வாய்ப்பு உருவாக்கம் மற்றும் அடிப்படை கட்டமைப்பு மேம்பாடு ஆகியவற்றிற்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
கடலோர மாவட்டமாக உள்ள இராமநாதபுரத்தில் பேரிடர் மேலாண்மை, காலநிலை மாற்றத் தாக்கங்களை எதிர்கொள்ளும் திறன், கடல்சார் உயிரியல் வளப் பாதுகாப்பு மற்றும் நிலையான வளர்ச்சி ஆகிய துறைகளிலும் சிறப்பு கவனம் செலுத்தப்படும்.
மக்கள் குறைதீர்ப்பு எனது நிர்வாகத்தின் முக்கிய நோக்கங்களில் ஒன்றாக இருக்கும். பொதுமக்கள் எளிதில் அணுகக்கூடிய, வெளிப்படையான, பொறுப்புணர்வுமிக்க நிர்வாகத்தை வழங்க மாவட்ட நிர்வாகம் தொடர்ந்து செயல்படும். அரசின் அனைத்து நலத்திட்டங்களும் பயனாளிகளைச் சென்றடைவதை உறுதி செய்வோம்.
இராமநாதபுரம் மாவட்டத்தை வளர்ச்சி, சமூக நீதி, சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் மக்கள் நலன் ஆகிய துறைகளில் முன்னோடி மாவட்டமாக உருவாக்க அனைவரின் ஒத்துழைப்பையும் கேட்டுக்கொள்கிறேன். குறிப்பாக ஊடக நண்பர்களின் ஆக்கப்பூர்வமான பங்களிப்பு மாவட்ட வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கும் என்பதில் எனக்கு நம்பிக்கை உள்ளது.
அரசின் திட்டங்களை திறம்பட செயல்படுத்தி, மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில் முழு அர்ப்பணிப்புடன் பணியாற்றுவேன் என்பதை உறுதியளிக்கிறேன்.
இத்தகைய சிறப்புமிக்க தருணத்தில் எனது வளர்ச்சிப்பாதையில் உறுதுணையாக இருந்த எனது ஆசிரியர் பெருமக்களுக்கும் குறிப்பாக எனது ஆசிரியர் திரு.அசோக்குமார் ஐயா அவர்களுக்கும் எனக்காக பல்வேறு சிக்கல்களை தாண்டியும் உழைத்து உழைத்து என்னை உருவாக்கிய எனது தாய், தந்தை பாட்டி, தாத்தா உள்ளிட்ட குடும்பத்தார் அனைவருக்கும் எத்தகைய சவாலான பணிகளிலும் எனக்கு உறுதுணையாக இருக்கும் எனது மனைவிக்கும், படிக்கின்ற காலத்தில் எனக்கு உதவி செய்த எத்தனையோ முகம் தெரிந்த மற்றும் தெரியாத நண்பர்கள் மற்றும் உறவுகளுக்கும் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன்.

கருத்துகள்
கருத்துரையிடுக