Unmai Sigaram News: சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை திட்டங்கள் குறித்து முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் ஆய்வு!


 மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் தலைமையில் இன்று (15.6.2026) சென்னை தலைமைச் செயலகத்தில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் திட்டங்கள் மற்றும் செயல்பாடுகள் குறித்த முக்கிய ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் மகளிர் முன்னேற்றத் திட்டங்கள், பெண்களின் பாதுகாப்பு, சுயதொழில் வாய்ப்புகள், சமூக நல உதவித் திட்டங்கள் மற்றும் அரசு வழங்கி வரும் பல்வேறு நலத்திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.

மேலும், மகளிரின் பொருளாதார முன்னேற்றத்தை அதிகரிக்கும் புதிய திட்டங்களை விரைவில் செயல்படுத்த அதிகாரிகளுக்கு முதலமைச்சர் அறிவுறுத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பெண்களின் முன்னேற்றமே தமிழகத்தின் வளர்ச்சி” என்ற நோக்கில் அரசு தொடர்ந்து செயல்பட்டு வருவதாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Unmai Sigaram News: மதுரை மத்திய தொகுதியின் வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்பு: இளைஞர்கள் மற்றும் மகளிருக்கு முன்னுரிமை அளிப்பேன் - VMS. முஸ்தபா எம்.எல்.ஏ உறுதி!

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைச் செயலாளராகப் பொறுப்பேற்ற திருமதி இரா. சாந்தி, முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்களைச் சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.

Unmai Sigaram News: இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 04.06.2026 அன்று மாவட்ட ஆட்சித்தலைவராக திரு.M.சிவகுரு பிரபாகரன்,இ.ஆ.ப., அவர்கள் பொறுப்பேற்றுக் கொண்டார்.