Unmai Sigaram News: முதலமைச்சர் ச. ஜோசப் விஜய்யைச் சந்தித்து ஆலோசனை நடத்திய தென்னிந்திய சர்க்கரை ஆலைகள் சங்கப் பிரதிநிதிகள்

 


தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்களை, இன்று (08.06.2026) தலைமைச் செயலகத்தில் தென்னிந்திய சர்க்கரை ஆலைகள் சங்கத்தின் (தமிழ்நாடு) தலைவர் திரு. ஆர். வரதராஜன் தலைமையிலான குழுவினர் சந்தித்துப் பேசினர்.

​இந்தச் சந்திப்பில், ராஜ்ஸ்ரீ சுகர்ஸ் நிறுவனத்தின் தலைவர் திருமதி ராஜ்ஸ்ரீ பதி, சக்தி சுகர்ஸ் நிறுவனத்தின் தலைவர் டாக்டர் எம். மாணிக்கம், EID Parry இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் தலைமைச் செயல் அலுவலர் திரு. முத்தையா முருகப்பன், கோத்தாரி சுகர்ஸ் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் திரு. அர்ஜுன் கோத்தாரி, பொன்னி சுகர்ஸ் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் திரு. என். ராமநாதன், கோத்தாரி சுகர்ஸ் நிறுவனத்தின் இயக்குநர் திரு. எம். சில்வெஸ்டர் மற்றும் EID Parry இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் தலைமைச் செயல்பாட்டு அலுவலர் திரு. ஜே.ஏ.எச் ஆகியோர் கலந்துகொண்டனர்.

​இந்தச் சந்திப்பின்போது சர்க்கரை ஆலைகள் சார்ந்த பல்வேறு அம்சங்கள் குறித்து முதலமைச்சரிடம் அவர்கள் ஆலோசனை நடத்தியதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Unmai Sigaram News: மதுரை மத்திய தொகுதியின் வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்பு: இளைஞர்கள் மற்றும் மகளிருக்கு முன்னுரிமை அளிப்பேன் - VMS. முஸ்தபா எம்.எல்.ஏ உறுதி!

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைச் செயலாளராகப் பொறுப்பேற்ற திருமதி இரா. சாந்தி, முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்களைச் சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.

Unmai Sigaram News: இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 04.06.2026 அன்று மாவட்ட ஆட்சித்தலைவராக திரு.M.சிவகுரு பிரபாகரன்,இ.ஆ.ப., அவர்கள் பொறுப்பேற்றுக் கொண்டார்.