Unmai Sigaram News: ஆசிய செஸ் சாம்பியன்ஷிப் தங்கம்: வீராங்கனை சவிதா ஸ்ரீ பாஸ்கருக்கு முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்கள் வாழ்த்து
சென்னை: மங்கோலியாவின் தலைநகர் உலான்படோரில் நடைபெற்ற 21-வது ஆசிய தனிநபர் மகளிர் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில், சென்னையைச் சேர்ந்த வீராங்கனை சவிதா ஸ்ரீ பாஸ்கர் அவர்கள் தங்கப் பதக்கம் வென்று தமிழ்நாட்டிற்குப் பெருமை சேர்த்துள்ளார். இச்சாதனையின் மூலம் அவர் 2027 FIDE மகளிர் உலகக் கோப்பை போட்டிக்கும் தகுதி பெற்றுள்ளார்.
இந்தச் சிறப்பான வெற்றியைப் பாராட்டி, முதலமைச்சர் ஜோசப் விஜய் (#CMJosephVijay) விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில்:
"
ஆசிய தனிநபர் மகளிர் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்று, 2027 உலகக் கோப்பை போட்டிக்கும் தகுதி பெற்றுள்ள சென்னையைச் சேர்ந்த செஸ் வீராங்கனை சவிதா ஸ்ரீ பாஸ்கர் அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
தமிழ்நாட்டிற்குப் பெருமை சேர்த்துள்ள சவிதா ஸ்ரீ பாஸ்கர் அவர்களுக்கு வாழ்த்துகளை மீண்டும் தெரிவித்துக் கொள்வதோடு, தமிழ்நாட்டு விளையாட்டு வீரர், வீராங்கனைகளின் அனைத்து முயற்சிகளுக்கும் இந்த அரசு எப்போதும் உறுதுணையாக நிற்கும் என்றும் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள்
கருத்துரையிடுக