Unmai Sigaram News: சமூகநீதி கணக்காய்வு அறிவிப்பு: முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய்யை நேரில் சந்தித்து பாமக தலைவர்கள் நன்றி!
சென்னை, ஜூன் 22:
தமிழ்நாடு அரசு, ஆளுநர் உரையில் 'சமூகநீதி கணக்காய்வு' (Social Justice Audit) நடத்தப்படும் என்று அறிவித்ததை வரவேற்று, பாட்டாளி மக்கள் கட்சியின் சட்டமன்றக் குழுவினர் முதலமைச்சரை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.
சென்னை, தலைமைச் செயலகத்தில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்களை, பாட்டாளி மக்கள் கட்சியின் சட்டமன்றக் கட்சித் தலைவர் முனைவர் சௌமியா அன்புமணி தலைமையிலான குழுவினர் இன்று சந்தித்தனர்.
இந்தச் சந்திப்பில், சட்டமன்ற உறுப்பினர்கள் திரு. சி. சிவகுமார், திரு. ஏ. கணேஷ்குமார், திரு. ஜி. வைத்திலிங்கம் மற்றும் சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் திருமதி பெ. சக்தி கமலாம்பாள் ஆகியோர் உடனிருந்தனர்.
சமூக நீதியை நிலைநாட்டும் வகையில், தமிழ்நாடு அரசு சமூகநீதி கணக்காய்வினை நடத்தும் என்று ஆளுநர் உரையில் அறிவித்தமைக்காக, முதலமைச்சருக்கு இக்குழுவினர் தங்கள் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டனர். தமிழகத்தின் சமூகநீதிக் கொள்கையை முன்னெடுத்துச் செல்லும் அரசின் இந்த நடவடிக்கைக்குத் தங்களின் ஆதரவை உறுதிப்படுத்தும் விதமாக இந்தச் சந்திப்பு அமைந்தது.

கருத்துகள்
கருத்துரையிடுக