Unmai Sigaram News: கன்னியாகுமரி மாவட்டத்தில் மீனவர்களுக்கு மீன்பிடித்தடைக்கால நிவாரண உதவித்தொகை மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன!
கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வருவாய் கூட்டரங்கில் நடைபெற்ற விழாவில், மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. மு. பிரதாப், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் திரு. செ. ராஜேஷ் குமார் மற்றும் மாண்புமிகு மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சர் திரு. ஆ. ஸ்ரீநாத் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்ச்சியில், மேற்கு கடற்கரை மீனவர்களுக்கு மீன்பிடித்தடைக்கால நிவாரண உதவித்தொகைகளை அமைச்சர்கள் வழங்கினர். அதனைத் தொடர்ந்து, தகுதியுள்ள மீனவ பயனாளிகளுக்குப் பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் அவர்கள் வழங்கிக் கௌரவித்தனர்.

கருத்துகள்
கருத்துரையிடுக