Unmai Sigaram News: பெண்களின் பாதுகாப்பிற்காக 'சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை': முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் தொடங்கி வைக்கிறார்!


பெண்களின் பாதுகாப்பினை மேம்படுத்தும் நோக்கில், தமிழ்நாடு காவல்துறையின் சார்பில் 'சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை' தொடங்கப்பட உள்ளது. இந்த அதிரடிப்படையை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் தொடங்கி வைக்கிறார்.

​இந்தச் சிறப்பு அதிரடிப்படையின் முக்கிய செயல்பாடுகள்:

  • ​பொது இடங்களில் கண்காணிப்பு மற்றும் சுற்றுக்காவல் பணிகளை மேற்கொள்வது.
  • ​பொது இடங்களில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகளைத் தடுத்தல்.
  • ​குற்றங்கள் நிகழ வாய்ப்புள்ள பகுதிகளைக் கண்டறிந்து உரிய நடவடிக்கைகள் எடுத்தல்.
  • ​பொறுப்புடைய அனைவரையும் ஒருங்கிணைத்துப் பாதுகாப்பான சமூகத்தை உருவாக்குதல்.
  • ​காவல்துறையின் இருப்பை உறுதி செய்து, பெண்கள் மற்றும் குழந்தைகள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்துதல்.
  • ​பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு உகந்த சமூகத்தை உருவாக்கும் நோக்கில் மக்கள் இயக்கமாகச் செயல்படுதல்.

​இந்தத் தொடக்க விழா 09.06.2026 அன்று மாலை 5.00 மணிக்கு, சென்னை எழும்பூரில் உள்ள இராசரத்தினம் அரங்கத்தில் நடைபெறுகிறது.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Unmai Sigaram News: மதுரை மத்திய தொகுதியின் வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்பு: இளைஞர்கள் மற்றும் மகளிருக்கு முன்னுரிமை அளிப்பேன் - VMS. முஸ்தபா எம்.எல்.ஏ உறுதி!

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைச் செயலாளராகப் பொறுப்பேற்ற திருமதி இரா. சாந்தி, முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்களைச் சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.

Unmai Sigaram News: இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 04.06.2026 அன்று மாவட்ட ஆட்சித்தலைவராக திரு.M.சிவகுரு பிரபாகரன்,இ.ஆ.ப., அவர்கள் பொறுப்பேற்றுக் கொண்டார்.