Unmai Sigaram News: பதிவுத்துறையின் செயல்பாடுகளை மேம்படுத்த முதல் ஆய்வுக் கூட்டம்: அமைச்சர் த. லோகேஷ் தமிழ்செல்வன் தலைமையில் ஆலோசனை!
சென்னை:
மாண்புமிகு வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் திரு. த. லோகேஷ் தமிழ்செல்வன் அவர்கள் தலைமையில், பதிவுத்துறையின் செயல்பாடுகளை மேம்படுத்துவது குறித்த முதல் ஆய்வுக் கூட்டம் சென்னையில் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் அனைத்து மண்டல துணை பதிவுத்துறை தலைவர்கள், மாவட்ட பதிவாளர்கள் (நிர்வாகம் மற்றும் தணிக்கை), மற்றும் பதிவுத்துறை உதவி பொறியாளர்கள் கலந்துகொண்டனர். கூட்டத்தில், துறையின் தற்போதைய செயல்பாடுகள், பதிவாளர் அலுவலகங்களில் பொதுமக்களுக்கான சேவைகளை விரைவுபடுத்துதல் மற்றும் நிலுவையில் உள்ள பணிகள் குறித்து விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டது.
குறிப்பாக, அலுவலர்களின் பணித்திறனை (Performance) மேம்படுத்துவது குறித்தும், அரசு நிர்ணயித்துள்ள இலக்குகளை முறையாக அடைவது தொடர்பாகவும் அமைச்சர் முக்கிய ஆலோசனைகளை வழங்கினார். பதிவுத்துறையில் வெளிப்படைத்தன்மையைக் கொண்டுவருவதற்கும், கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கும் முன்னுரிமை அளிக்கப்படும் என்று இக்கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

கருத்துகள்
கருத்துரையிடுக