Unmai Sigaram News: பாரா விளையாட்டு வீரர்கள் துளசிமதி மற்றும் மனோஜ்குமாருக்கு ஊக்கத்தொகை மற்றும் உபகரணங்கள்: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா வழங்கினார்!

 


சென்னை:

​மாண்புமிகு பொதுப்பணி மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் திரு. ஆதவ் அர்ஜுனா அவர்கள், விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்கும் பாரா விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும் வகையில் நிதி மற்றும் உபகரணங்களை வழங்கினார்.

​இந்த நிகழ்வில், பாரா பேட்மிண்டன் வீராங்கனை துளசிமதி முருகேசனுக்கு பாராட்டு தெரிவிக்கும் வகையில் ரூ. 10 இலட்சத்திற்கான காசோலையை அமைச்சர் வழங்கினார். மேலும், பாரா துப்பாக்கி சுடுதல் வீரர் மனோஜ்குமாருக்கு, அவரது பயிற்சிக்காக ரூ. 6.27 லட்சம் மதிப்பிலான அதிநவீன துப்பாக்கி சுடுதல் விளையாட்டு உபகரணத்தை வழங்கினார்.

​தொடர்ந்து, பல்வேறு போட்டிகளில் சிறந்து விளங்கிய பிற விளையாட்டு வீரர்களுக்கு ரூ. 15.65 லட்சம் உயரிய ஊக்கத்தொகையினையும் அமைச்சர் வழங்கிக் கௌரவித்தார். தமிழகத்தில் விளையாட்டு வீரர்களை ஊக்கப்படுத்தி, சர்வதேச அளவில் அவர்களை மென்மேலும் சாதனைகள் படைக்கச் செய்ய தமிழ்நாடு அரசு தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Unmai Sigaram News: மதுரை மத்திய தொகுதியின் வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்பு: இளைஞர்கள் மற்றும் மகளிருக்கு முன்னுரிமை அளிப்பேன் - VMS. முஸ்தபா எம்.எல்.ஏ உறுதி!

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைச் செயலாளராகப் பொறுப்பேற்ற திருமதி இரா. சாந்தி, முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்களைச் சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.

Unmai Sigaram News: இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 04.06.2026 அன்று மாவட்ட ஆட்சித்தலைவராக திரு.M.சிவகுரு பிரபாகரன்,இ.ஆ.ப., அவர்கள் பொறுப்பேற்றுக் கொண்டார்.